கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

1008

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் இன்று மாலை கரையை கடப்பதால், பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement