கஜா புயல் பாதிப்பு இரவு பகலாக நிவரண பொருட்களை வழங்கி வருகிறது சத்தியம் தொலைக்காட்சி

859

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் டெல்டா மற்றும் உள் மாவட்டங்கள் உருக்குலைந்தன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, நம் சொந்தங்களுக்கு கை கொடுப்போம் என்ற பெயரில் சத்தியம் தொலைக்காட்சி மனித நேயத்திற்கான ஓர் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, சத்தியம் தொலைக்காட்சி நேயர்கள் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், முதல்கட்டமாக சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை சத்தியம் தொலைக்காட்சி குழுவினர் வாகனங்களில் எடுத்துக்கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றனர்.

இதுவரை அதிகாரிகள் யாரும் செல்லாத இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை சத்தியம் தொலைக்காட்சி குழுவினர் வழங்கி வருகின்றனர்.

இரவு பகலாக நிவாரண பொருட்களை வழங்கி வரும் சத்தியம் தொலைக்காட்சி குழுவினர், அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களுக்கு தேவையான மற்ற உதவிகளையும் செய்து வருகின்றனர்.