அப்போது டெல்லி கேப்டன்.., தற்போது வேட்பாளர்.., டெல்லி கிழக்கில் போட்டியிடும் கம்பீர்

397

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டகாரர் கவுதம் கம்பீர். 2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம்.

ஐபிஎல் போட்டிகளில் இவர் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். தற்போது இவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாகவும். மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் இவர் கூறி இருந்தார். பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுவதாக இவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் லோக்சபா தேர்தலில் இவர் பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of