காந்தியும்.. தமிழகமும்..! : “எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றுபவர்கள் தமிழர்கள்” – மகாத்மா காந்தி

2963

தென் ஆப்ரிக்க போராட்டம்  தொடங்கி  ரவுலட் சட்டம்  அறிவிப்பு என அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழகத்திற்கும் நிறைய  தொடர்புண்டு….

காந்தி ஜெயந்தியை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த நல்ல நாளில் தமிழர்களுக்கும் காந்திக்கும் இருக்கும் உறவு, தமிழர்களைப்பற்றி காந்தியடிகள் கூறிய வார்த்தைகளை ஆகியவற்றை தற்போது  பார்க்கலாம்….

தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சந்தித்து கொள்ளாத இனத்தினர்

எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றுபவர்கள்  எளிய தமிழர்கள்‘ – இது யார் கூறியது தெரியுமா? தமிழர்களை பார்த்து தேசப்பிதா காந்தியடிகள்  கூறிய வார்த்தைகள்….

நமது நாட்டின் விடுதலைக்கும் தமிழகத்திற்கும் நிறைய பங்குண்டு என்பதை நாம் அறிவோம்… அதே சமயம் காந்திக்கு  தமிழகத்துடனும்  தமிழர்களுடனும் நிறைய தொடர்புண்டு…

இனவெறிக்கு எதிராக தென்ஆப்பிரக்காவில் காந்தி ஒரு தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க காரணமாய் அமைந்தவர் பாலசுந்தரம் என்ற தமிழர். இனத்துவேஷத்தின் காரணமாக தாக்கப்பட்ட பாலசுந்தரத்திற்காக  வாதாடி அவரை பாதுகாத்ததின் மூலம்  தென்ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார் காந்தி…

card அதன்பின் தென்ஆப்பிரிக்கத் தமிழர்களுக்காக ‘இந்தியன் ஒபினியன்’ என்ற இதழை தமிழிலும் நடத்திய காந்தி, அக்கால கட்டத்திலேயே  தமிழ் கற்க ஆரம்பித்து அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பிரமுகர்களை இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.

தென்ஆப்பிரிக்க சத்யாகிரகம் அங்கு குடியேறி வாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும்,கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.

ஆகவே தான் அவர் தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராக 1896ல் தமிழகத்தில் பிரசாரம் செய்தார். அப்போது “தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சந்தித்து கொள்ளாத இனத்தினர்” என்று பிரச்சாரத்தில் புகழாரம் சூட்டினார் மகாத்மா காந்தி….

தென் ஆப்பிரிக்கா  போராட்டத்திற்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் காந்திக்கு தார்மீக ஆதரவு பெருகியது. அதேபோல் காந்தியின் தென்ஆப்ரிக்க போராட்டத்தில் நாடுகடத்தப்பட்டும், சிறைச்சாலைகளில் நோயுற்றும், ஏராளமான தமிழர்கள் மாண்டனர். அவர்களில் தில்லையாடி வள்ளியம்மை, நாராயணசாமி, நாகப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இதனாலெல்லாம் தான் தமிழர்களை சந்திக்கும்போது ரத்தபாசத்துடன் கூடிய சகோதர உணர்வுக்கு தான் ஆட்படுவதாகவும், அவர்களின் அர்பணிப்பு,வீரம்,எளிமை ஆகியவை தன்னை மிகவும் ஆக்கிரமிக்கிறதென்றும் காந்தி எழுதியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கபோராட்டத்தில் வெற்றிஈட்டிய பின் தமிழகத்திற்கு 1915ல் வந்தபோது காந்திக்கு   தமிழகத்தில் தடபுடலான வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது பேசிய காந்தி, “தென்ஆப்பிரிக்க விடுதலை போராட்டத்திற்கு இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் தான் தமிழர்கள்…..

எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த எளிய தமிழர்கள் தான் தனக்கு உணர்வூட்டினார்கள் என்றார்.இது ஒருபுறமிருக்க காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு தமிழக மக்களிடையே தன்னிகரற்ற ஆதரவு நிலை இருந்தது. இதற்காக தமிழக மாணவர்கள் படிப்பை துறந்தனர்.

தேசப்பற்றுள்ளோர் அரசுவேலைகளை, பதவிகளைத் துறந்தனர். காந்திஅறிவித்த கள்ளுகடை மறியல் போராட்டத்தில் அந்நாளில் சென்னையிலிருந்த 9000 சாராயக்கடைகளை ஏலம் எடுக்க ஆளின்றி 6000க்கு மேற்பட்டவைகள் அடைக்கப்பட்டன.

இவையாவும் இன்று நினைத்துப் பார்க்கவியலாத அதிசயங்களாகும்.

அதேபோல் காந்தியடிகள் தண்டியில் உப்புசத்யாகிரகயாத்திரை நடத்தியபோது அதற்கு இணையாக தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜியும், சர்தார் வேதரத்தினமும் உப்புசத்யாகிரகத்தை அரங்கேற்றினர்.

சென்னை மாகாணத்தில் ராஜாஜியின் வீட்டிலிருந்தபோது தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும்

போராட்ட அறிவிப்பை முதன் முதலாக அறிவித்து அதற்கான மாபெரும் பொதுக்கூட்டத்தையும் சென்னையில் நடத்தினார் காந்தி.இந்த போராட்டதிற்கு மாபெரும் ஆதரவும் கிட்டியது. 

காந்தியடிகள் சிறைசென்ற தருணங்களிலெல்லாம் அவரது ‘யங்இந்தியா’ இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றவர்கள் ராஜாஜி, மதுரை ஜார்ஜ் ஜோசப் , ஜே.சி.குமரப்பா போன்றவர்களே.

இப்படி காந்தியோடு தொடர்பு உள்ளவர்களின் பட்டியல் தமிழகத்தில் தாராளம்,ஏராளம்!

தமிழைக் கற்பதிலும், தமிழ் கலாச்சாரம், பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் அளப்பரிய ஆர்வம்காட்டியவர்  காந்தியடிகள்.

திருக்குறள் மீது அளவற்ற மரியாதை கொண்ட காந்தி, ” திருவள்ளுவ மாமுனிவரை இன்னும் வட இந்தியர்கள் தெரிந்து கொள்ளவில்லையே….” என்ற ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார்.

ஒளவையின் ஆத்திச்சூடி, கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளை தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தது மட்டுமல்லாமல், அவை பற்றி பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியுமுள்ளார்.

அண்ணல் காந்தியடிகள் மொத்தம் 20முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். தமிழகத்தின் கிராமங்கள், பட்டிதொட்டிகள், சிற்றூர்கள், நகரங்கள் என பல இடங்களுக்கும் பயணப்பட்டுள்ளார். அவரது முதல் பயணம் 1896 ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்தது. கடைசிப் பயணம் 1946 ஆண்டும ஜனவரி மாதம்  என்று கூறப்படுகிறது…

இப்படி தமிழகர்களுடனான தனது உறவுக்குறித்து காந்தி தனது பேச்சுக்களிலும் எழுத்துகளிலும் காந்தி  வெளிப்படுத்தியிருக்கிறார்.தன்னுடைய போராட்டங்களுக்கெல்லாம் அதிகளவில் தோளோடு தோள் நின்று அளப்பரிய தியாகத்தையும், அரிதினும் அரிதான உயிரையும், தந்தது தமிழர்களே என்று தெரிவித்தார் காந்தி….

‘இந்த அனுபவங்களை என்னுடைய வாழ்நாள் இறுதிவரை கருவூலம்போல் போற்றுவேன்’ என்றும் எழுதினார்….தனது பேச்சிலும், எழுத்திலும் , வாழ்நாளில் தமிழர்களின் பெருமையையும்,  வீரத்தையும் போற்றியவர் காந்தி… அவர் போற்றிய தமிழர்கள் உள்ளவரை காந்தியின் புகழ் எந்நாளும் ஓங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை….

தென்ஆப்பிரிக்கத் தமிழர்களுக்காக ‘இந்தியன் ஒபினியன்’ என்ற இதழை தமிழிலும் நடத்தினார். இக்கால கட்டத்தில் தமிழ் கற்க ஆரம்பித்த காந்தி, அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பிரமுகர்களை இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.

தமிழகத்தில் திலகருக்கு இணையாக மாபெரும் தேசபக்த எழுச்சியை உருவாக்கிய வ.உ.சி பற்றியும், சிறைமீண்டு சிதம்பரனார் செய்து வந்த தொண்டுகள் பற்றியும் மிக உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நிதிதிரட்டி தென்நாட்டு திலகருக்கு அனுப்பி உதவினார்.

தென்ஆப்பிரிக்கசத்யாகிரகம் அங்கு குடியேறிவாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும்,கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.

ஆகவே தான் அவர் தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராக 1896ல் தமிழகத்தில் பிரசாரம் செய்தார்அப்போது பச்சையப்பன் மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி, “தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சந்தித்து கொள்ளாத இனத்தினர்” என்றார்.

தென்னாப்பிரிக்காவிற்கு நிதிஉதவி அனுப்பி ஆதரவளித்தவர்கள் ஜி.ஏ.நடேசன், அன்னிபெசன்ட், எஸ். சுப்பிரமணிய ஐயர்….போன்றபலர்! அதேபோல் காந்தியின் தென்ஆப்ரிக்க போராட்டத்தில் நாடுகடத்தப்பட்டும், சிறைச்சாலைகளில் நோயுற்றும், ஏராளமான தமிழர்கள் இறந்துள்ளனர்.

அவர்களில் தில்லையாடி வள்ளியம்மை, நாராயணசாமி, நாகப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

 

 

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of