மகாத்மா காந்தியை சுலபமாக சுட்டுக்கொன்றது எப்படி? உதவியாளர் தகவல்..

526

தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி 30-ம் தேதி) நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தியை மிக எளிதாக நெருங்கி, சுலபமாக சுட்டுக்கொல்ல முடிந்தது எப்படி? என்பது தொடர்பாக காந்தியின் உதவியாளராக பணியாற்றிய கல்யாணம்(96) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த கல்யாணம் இதுதொடர்பாக கூறியதாவது.காந்தி கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி போலீசார் எச்சரித்திருந்தனர்.

அதனால்அவரை தங்களது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் முயன்றனர். ஆனால் இதை காந்தி மறுத்து விட்டார்.பாதுகாப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு பாதுகாப்பு தேவையும் இல்லை.

என்னை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர முயன்றால் நான் டெல்லியை விட்டு வெளியேறி வேறெங்காவது சென்று விடுவேன் என காந்தி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.பாதுகாப்புக்கு காந்தி சம்மதித்து இருந்தால் அவரை சந்திக்க வந்தவர்களை எல்லாம் தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கலாம்.

அவரது படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனஇவ்வாறு கல்யாணம் கூறினார்.
1943-ம் ஆண்டு முதல் காந்தியின் மரணம் வரை அவரது உதவியாளராக பணியாற்றிய வி.கல்யாணம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தியின் உயிர் பிரிந்தபோது அவரது அருகில் இருந்த கல்யாணம் அந்த துயரச்செய்தியை அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் உள்துறை மந்திரி வல்லபாய் பட்டேல் ஆகியோருக்கு முதல்முதலாக தெரிவித்தேன் என கூறியிருந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of