எரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள்..! பரபரப்பான வாக்குச்சாவடி..!

443

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்த்தில் உள்ள வாக்குச்சாவடியில் புகுந்த மர்ம நபர்கள் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு நிலவியது.

இதனால் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் உடனடியாக வாக்குசாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 83,84வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்ட்டது.

85வது வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக்கோரி வாக்காளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்தவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement