அங்க பாருடா பெரிய வெளவால்..! ஹேய் அது வெளவால் இல்ல..! அதிர்ந்த மக்கள்..!

1094

மெக்சிகோவில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்தது.

தங்களுக்கு போட்டியாக செயல்படும் எதிர்தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவர்களை கொன்று சாலையோரத்தில் உடல்கள் குவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், மெக்சிகோவின் உருவாபன் என்ற நகரில் உள்ள பாலத்தில் 9 பேரின் உடல்கள் கட்டி தொங்க விடப்பட்டிருந்தன. இதன் அருகே சாலையோரத்தில் 10 பேரின் உடல்கள் குவிக்கப்பட்டிருந்தன.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.போதை கும்பலின் இதுபோன்ற கொடூர செயல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.