குப்பை கழிவுகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – செங்குட்டுவன்

629

கிருஷ்ணகிரி நகராட்சியில் தேக்கி வைப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவன் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கினால் தொற்றுநோய் அதிகமாக பரவி வருவதாக வந்த தொடர் புகாரையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதாரம் இல்லாத வகையில் எட்டு ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளால், நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்துள்ளதாகவும், எனவே உடனடியாக இந்த குப்பை கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இல்லையென்றால் இந்த குப்பை கழிவுகளை அகற்ற வலியுறுத்தி, கழக தொண்டர்களுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் தெரிவித்தார்.

Advertisement