சோழவரம் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து பெண் பலி!

358

சோழவரம் அருகே உள்ள பூதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரமிளா (42). கணவரை இழந்த இவர் ஜனப்பன் சத்திரம் கூட்டு ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார்.

அதிகாலை பிரமிளா வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் வீட்டில் சமையல் செய்வதற்காக பிரமிளா, கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருப்பதை அவர் கவனிக்கவில்லை.

இதில் கியாஸ் தீப்பற்றி சிலிண்டர் வெடித்தது. மேலும் பிரமிளா உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பிரமிளா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of