சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு..!

515

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளையின் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2020 ஜனவரி மாதத்தில் ரூ.734 ஆக விலை உயர்ந்து காணப்பட்டது. அதிலும் பிப்ரவரி மாதம் விலை திடீரென ரூ.147 விலை அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மார்ச் மாதம் ரூ.55 குறைந்து ரூ.826-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளையின் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது ரூ.826 ஆக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளையின் விலை ரூ.65 குறைக்கப்பட்டு ரூ.761.50-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of