நான் அதை செய்யவில்லை.., நிரூபித்தால் அரசியலைவிட்டு செல்கின்றேன்.., கம்பீர் தடாலடி

606

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக அங்கு பிரசாரம் செய்கிறார்கள். அண்மையில் பா.ஜனதாவில் இணைந்த கவுதம் கம்பீர், கிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளரான அதிஷி போட்டியிடுகிறார். கவுதம் கம்பீர் 2 வாக்காளர் அட்டை வைத்துள்ளதாக ஆம் ஆத்மியை சேர்ந்த அதிஷி குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், அதிஷியை மோசமாக விமர்சனம் செய்து துண்டுச் சீட்டு ஒன்று அங்கு வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜனதாதான் காரணம் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா கட்சியோ அதனை நிராகரித்துள்ளது, இது ஆம் ஆத்மியின் மோசமான பிரசாரம் என கூறியுள்ளது. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால், கவுதம் கம்பீரை விமர்சனம் செய்தார்.

இப்போது பெண் வேட்பாளருக்கு எதிராக மோசமான துண்டுச் சீட்டை நான் வெளியிட்டேன் என நிரூபித்தால் அரசியலைவிட்டு விலக தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். “அவர்களிடம் நான் இதனை செய்தேன் என்று நிரூபித்தால், ஆதாரம் வழங்கினால் இப்போதே அரசியலில் இருந்து விலகுகிறேன்.

23-ம் தேதி சமர்பித்தாலும் நான் விலகுவேன். இதே சவாலை கெஜ்ரிவாலும் ஏற்கவேண்டும். ஆதாரத்தை சமர்பிக்கவில்லை என்றால் 23-ம் தேதிக்கு பின்னர் கெஜ்ரிவால் அரசியலில் இருக்க கூடாது,” எனக் கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது யாருக்கு எதிராகவும் நான் எதிர்மறையான அறிக்கையை கொடுத்தது கிடையாது. நான் கண்டிப்பாக அவதூறு வழக்கு தொடருவேன் எனவும் கம்பீர் குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of