இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் – மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

257

மருத்துவ பட்டப்படிப்பு – முதுநிலை படிப்புக்கான, அகில இந்திய ஒதுக்கீடுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கடந்த நான்கு ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை.

இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி OBC- பிரிவினருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவபடிப்புகளுக்கு, OBC -பிரிவினருக்கான இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of