இந்தியாவின் எடிசன்

757

கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பது தான் இவரது இயற்பெயர்…

1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.

அதிகம் படிக்கவில்லை என்றாலும், பல நூல்களை வாங்கிப் படித்து தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.

தனது18வது வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து தமிழகத்தில் விற்பனை செய்து அதன்மூலம் லாபம் ஈட்டினார்.

பின்னர், ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்து, சேமித்த பணத்தில், ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி, அதன் பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் பைக்கை வடிவமைத்தார்.2-Seater-petrol-engine

His-first-motor-cycleநாளடைவில், ஊழியராக பணிபுரிவதை வெறுத்த ஜிடி நாயுடு, வேலையை விட்டுவிட்டு சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டு, திருப்பூரில் பருத்தி ஆலை ஒன்றை தொடங்கினார்.

Electric-motor

இதன்மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்த இவர், தொழிலை விரிவுபடுத்துவதற்காக மும்பை சென்று, அங்கு ஏற்பட்ட நஷ்டத்தால், வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.

ஆனாலும், தோல்வியால் துவளாத இவர், பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி பழனி இடையே பேருந்து சேவையை நடத்தினார்.

பின்னர், தனி முதலாளியாக இருக்க விரும்பாத இவர், சிலரை கூட்டு சேர்த்துக்கொண்டு, “யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ்” நிறுவனத்தை தொடங்கினார்.

GD-first-bus

பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி பயணச்சீட்டு வழங்கும் கருவி இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி பழச்சாறு பிழியும் கருவி வெட்டுக்காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.

ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர் இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.Industrial-exhibition

இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு “நாயுடு காட்டன்” என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.

கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு தனது 80-வது வயதில் (1974) மறைந்தார்.GD-Naidu

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of