ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

145

பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் சிறந்த அரசியல் தலைமையை வெளிப்படுத்தியவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அச்சமின்றி, வெளிப்படையாக கருத்துகளை வெளிபடுத்துபவர்.தொலைநோக்கு சிந்தனையுடன் நாட்டுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை செய்திருக்கிறார். ஏழைகளின் உரிமைக்கான குரலாக விளங்கியவர்.

நீதிக்காக போராடிய தொழிலாளர்களின் தீவிரமான பாதுகாப்பு அமைச்சராக இருந்து இந்தியாவை வலிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றியவர்.

நீண்டகால தனது பொதுவாழ்வில் ஒரு போதும் தனது கொள்கைகளில் இருந்து பின்வாங்காதவர். அவரது எளிமையும் மனிதாபிமானமும் குறிப்பிடத்தக்க ஒன்று. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.