அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை..! – போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல்..!

805

கருப்பின நபர் ஒருவர் அமெரிக்க போலிசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததை கண்டித்து அமெரிக்க வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

அமெரிக்காவின் மினஸோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த வாரம் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த காவல்துறையினர், அவரை பொது இடத்தில் கழுத்தின் மீது காலால் இருக்கி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியது.

இதனை தொடர்ந்து இந்த இனவெறி தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள கருப்பின மக்கள் வெகுண்டெழுந்து கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதிகளில் குவியும் போராட்டக்காரர்கள் கட்டிடங்கள், வாகங்களுக்கு தீவைப்பதோடு பொது சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் மினியாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், ஆக்லாண்ட் உள்ளிட்ட நகரங்களில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் குலைந்துள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாகாண அரசுகள் திணறி வருகின்றன.

இதனிடையே நேற்று வெள்ளை மாளிகை எதிரே கூடிய போராட்டக்காரர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, இறந்த கருப்பினத்தவருக்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு காரணங்களுக்கான பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை அடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இதனால் அமெரிக்காவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப், ஜார்ஜ் பிலாய்டின் மரணம் அனைத்து அமெரிக்க மக்களையும் வருத்ததில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவரது மரணம் சமூக விரோத கும்பல்களால் கொச்சைப்படுத்தப்பட்டு விடக்கூடாது என தெரிவித்தார்.

மாகாணங்கள், நகரங்களில் நடைபெற்ற கலவரங்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது அவமானகரமானது எனவும் இதனை தடுக்க ஆயுதம் ஏந்திய படைகள் மற்றும் சட்டம் ஏற்றும் வல்லுநர்களை மாகாணங்களுக்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்தார்.

மேலும் மாகாணங்களும், நகரங்களும் போராட்டத்தை கட்டுப்படுத்த தவறினால், ராணுவத்தை களமிறக்கி மக்களை பாதுகாப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of