டிரென்டாகும் GetWellSoonTHALA ஹேஷ்டேக்..! அஜித்திற்கு என்ன ஆச்சு..? ரசிகர்கள் அதிர்ச்சி..!

425

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ஆக்ஷன் மற்றும் ரேசிங் சார்ந்த கதையம்சத்தை கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிமாநிலங்களில் விறுவிறுவென நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் சூட்டிங்கின்போது, நடிகர் அஜித்குமாருக்கு கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த தல அஜித்தின் ரசிகர்கள், கெட்வெல்சூன்தல என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரென்ட் செய்து வருகின்றனர்.