மதுரை கிராமத்தில் உலாவும் பேய்..? இணையத்தை திகிலூட்டும் புகைப்படம்..!

8772

பேய் உள்ளதா..? இல்லையா..? என்ற கேள்வி நீண்ட நெடுநாட்களாக உலகில் இருந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கு, பலரும் பலவிதமான பதில்களை அளித்தும், அதற்கான அச்சம் தீரவில்லை. இந்நிலையில், மதுரையில் பேய் தொடர்பான அச்சம் தீவிரமாக பரவி வருகிறது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டி கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். பொதுவாக, வேலை செய்த பகுதியை புகைப்படம் எடுத்து, அதனை அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கம்.

அதன்படி, நேற்றும் பொதுமக்களில் ஒருவர் புகைப்படத்தை எடுத்துள்ளார். அதில், சுடுகாடு அருகே இருந்த பகுதியில் கருப்பாக ஒரு உருவம் தெரிந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நபர், கிராம மக்களிடமும் அந்த புகைப்படத்தை காண்பித்துள்ளார். இவ்வாறாக பலரிடமும் பரவிய அந்த புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement