3 வயது சிறுவனை தாய் போல் பாதுகாத்த கரடி!

157

அமெரிக்காவில் காட்டுக்குள் தொலைந்த 3 வயது சிறுவனை தாய் போல் பாதுகாத்த கரடியின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் இருக்கும் கிராவன் கவுண்டியில் எர்னல் நகரை சேர்ந்த 3 வயது சிறுவன் கேஸே ஹாதாவ் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான்.

அங்கு அருகில் இருந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கேஸே, வழித்தவறி காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டான்.

குழந்தைகளுடன் விளையாடச் சென்ற கேஸே வீட்டிற்கு திரும்பவில்லை என்றதும், பெற்றோர் உடனே அருகேயுள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அனைவரும் இணைந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அங்குள்ள வனப் பகுதிகளில் காவலர்கள், தீவிரமாக சிறுவனை தேடி போது, மிகப்பெரிய கருப்புக்கரடி ஒன்று, சிறுவனைப் பாதுகாத்து வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது