இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி…!

520
புதைப்படிவ நிபுணர் ஒருவர் 3 அடி உயர ராட்சத கிளியின் புதைப்படிவங்களை கண்டெடுத்துள்ளார்.

வெல்லிங்டன்:parrot33

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது, அங்கு 1கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளியின் புதைபடிவங்களை கண்டெடுத்தார்.  அந்த கிளியின் உயரம் ஒரு மனிதனின் சராசரி உயரத்தின் பாதிக்கும் மேலானது என்பது தெரிந்தது. 

அந்த கிளி சுமார் மூன்றை அடி உயரமும், 7 கிலோ எடையும் இருந்திருக்கும் என கூறப்படுகிறது.  இந்த கிளி அசாதாரண உயரம் மற்றும் வலிமையை அங்கீகரிக்கும் வகையிலும் காணப்படுமாம். 

இந்த கிளிக்கு “ ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் ” என பெயரிட்டுள்ளனர்.  பின்னர், இந்த கிளி எப்படி இருந்திருக்கும் என்ற யூகத்தில், ஆய்வாளர்கள் ஒரு மாதிரி படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 

இந்த கிளியை குறித்து, நிபுணர் ட்ரெவர் வொர்த்தி “ ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடசை ” விட பிரமாண்டமான கிளிகள் உலகில் இருக்க வாய்ப்பு இல்லை என கூறினார். 

பின்னர், இந்த கிளி இனம் வழக்கமான கிளிகளை விட அதிக உணவுகளை உட்கொண்டு வாழ்ந்திருக்கலாம் எனவும், அப்படி இல்லையென்றால் “ ஒருவேளை சக கிளிகளையே அது இரையாக உட்கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது ” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of