சாக்கடையை சுத்தம் செய்த ஊழியர்கள்.. திடீரென ஏற்பட்ட பரபரப்பு..

5355

மெக்சிகோ நகர்பகுதியில் உள்ள சாக்கடை அடைத்து காணப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஊழியர்கள், அந்த கால்வாயை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது, திடீரென ராட்சத எலி ஒன்று வெளியாகி, ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், பரிசோதனை நடத்தியதில், அது ராட்சத எலி பொம்மை என்று தெரியவந்தது.

ஹாலோவின் திருவிழாவிற்காக, உருவாக்கப்பட்ட இந்த ராட்சத எலி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால், சாக்கடையில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.