மனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை.. உதவிய தாய்..

2295

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், கடத்தூரை சேர்ந்த ரஞ்சித் என்பவர் மனைவியின் மகப்பேறுக்காக, காரைக்குடியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, மனைவியின் தங்கையான 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, ரஞ்சித் மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த ரஞ்சித்தின் தாயார் கவிதா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.