மகளுக்கு ஆண்ட்ராய்டு போன்…. ஃபேஸ்புக் சாட்டிங்… கர்ப்பமடைந்த சிறுமி..!

1011

நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் – காளியம்மாள் தம்பதி. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை 18 வருடங்களுக்கு முன் இறந்து விட்டது. இதனால் மகளின் நினைவாக  மரம் நடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதுவரை 4 லட்சம் மரங்கள் நட்டுள்ளதாக இந்த தம்பதியினர் கூறுகின்றனர். ஒரு கட்டத்தில் மரம் நடுவதையை முழு பணியாக மற்றி கொண்டனர். இந்நிலையில் அவர்களது 2வது மகள் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மரம் நடும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது மரங்கள் வளர்ப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து மகள் நன்கு கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய மொபைல் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

ஆனால் புதிய மொபைல் வாங்கிய மகிழ்ச்சியில் புதிய ஃபேஸ் கணக்கை தொடங்கிய சிறுமி அதன் மூலம் தென்காசி அடுத்து உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் உடன் பழக்கமாகியுள்ளார்.

இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் நாளடைவில் அதிகம் நெருக்காய் பழகி உள்ளனர். இதை சாதகமாக எடுத்த அந்த இளைஞர் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறியது மட்டும் இல்லாமல் வேலை வாங்கி தருவதாக சொல்லி சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின் கோயம்புத்தூர் அழைத்து சென்ற அவர் வாடகை அறை எடுத்து தங்கி ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை சிறழித்துள்ளார். இதனிடையே கர்பமடைந்த அந்த சிறுமி தற்போது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இவர் என்னை போல் பல பெண்களை ஏமாற்றியுள்ளார என்பது எனக்கு தெரியவில்லை.  எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். ஃபேஸ்புக் மூலம் சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of