பிறந்து சில நாளான பெண் குழந்தை..! உறவினர்கள் அரங்கேற்றிய கொடூரம்..!

832

நாகை மாவட்டம் பெருஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் அவரது மனைவி சுமித்ராவுக்கும் கடந்த 16 ஆம் தேதி அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பிறந்த குழந்தையின் வயிறு வீங்கியது போல இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் ஒரு வாரம் சிகிச்சையளித்தனர். அப்போது குழந்தை கறுப்பு நிறத்தில் வாந்தி எடுத்ததோடு, உடல்நலம் மிகவும் மோசமானது.

இதுகுறித்து குழந்தையின் உறவினர்களிடம் கேட்டபோது, நாட்டு வைத்திய சிகிச்சை அளிப்பதற்காக வெற்றிலை சாற்றுடன் பாதரத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை, தற்போது அபாயக் கட்டத்தில் இருந்து தப்பிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement