1 மணி நேரம் மனைவியின் சடலத்தோடு படுத்துக்கிடந்த நபர்..! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி காரணம்..!

1039

சென்னை மாதாவரம் பால்பண்ணை அருகே உள்ள கொசப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். 24-வயதாகும் இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு, ரஞ்சனி என்ற உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ரஞ்சித் அடிக்கடி குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மூடப்பட்ட ரஞ்சித் வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது தனது மனைவியின் சடலத்தோடு, மயங்கிய நிலையில் ரஞ்சித் படுத்துக்கிடந்துள்ளார். மனைவியின் சடத்தில் கழுத்துப்பகுதியில் சில காயங்கள் இருந்தது. இதையடுத்து அந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குழந்தை இல்லாததன் காரணமாக கடந்த 13-ஆம் தேதி அன்று இருவருக்குள்ளும் சண்டை நடந்துள்ளது. இதனால் ரஞ்சனி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அன்று ரஞ்சித் வெளியில் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ரஞ்சினி, தூக்குப்போட்டு சூசைட் செய்துக்கொண்டார். மீண்டும் வீட்டிற்கு வந்த ரஞ்சித், மனைவி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, மதுபானத்துடன் டீசல் கலந்து குடித்து சூசைட் செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.

ரஞ்சித் சுமார் ஒரு மணி நேரம் மனைவியின் சடலத்தோடு படுத்துக்கிடந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.