சீரியலில் மூழ்கிய பெண்..! திடீரென வந்த அழையா விருந்தாளி..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

437

மதுரை மாவட்டம் காமராஜர்புரம் அருகே உள்ள அண்ணா மேலத்தெருவை சேர்ந்தவர் லட்சுமி. கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனியாக வீடு எடுத்து தனிமையில் வசித்து வந்தார்.

இவர் தங்கியிருக்கும் வீட்டில் டிவி இல்லாத காரணத்தினால், அருகில் உள்ள உறவினர் வீட்டில் டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், சம்பவத்தன்றும் உறவினர் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பதறியடித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்ற அவர், புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

பின்னர், தீயணைப்புத்துறையினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, லட்சுமி உடல் கருகி உயிரிழந்து கிடந்தார். சடலத்தைக் கைப்பற்றிய கீரைத்துறை போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of