ஷாட்ஸ் போட்டு வந்த சிம்ரன்..! வழிமறித்த ஆண்..! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்..!

541

கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள எச்.எஸ்.ஆர் லே-அவுட் பகுதியில் சிம்ரன் கபூர் என்ற இளம்பெண் அவரது ஆண் நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஷாட்ஸ் மற்றும் டீ சர்ட்டை சிம்ரன் அணிந்துள்ளார்.

அந்த சமயத்தில் பைக்கில் வந்த மற்றொரு நபர், அவர்களை வழிமறித்து, இந்திய பாரம்பரிய உடைகளை பயன்படுத்துங்கள். தயது செய்து முறையான ஆடைகளை அணியுங்கள் என்று கூறினார்.

இதனால் கடும் கோபமடைந்த சிம்ரன், அந்த நபரை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடன் வந்த அந்த ஆண் நண்பர், இவர்களின் சண்டையை செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, இவர் மட்டும் பேன்ட் சர்ட் போன்ற அந்நிய உடைகளை அணிந்துக்கொள்வார். மற்றவர்கள் அணியக்கூடாதா போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of