தனது உருவபடத்தை கேக்கில் பதிவிட்டு பிறந்த நாள் கொண்டாடிய சிறுமியை வாழ்த்திய மோடி

271

புதுடெல்லி: தன்னுடைய பிறந்த நாளில் மோடியின் உருவப்படத்தை கேக்கில் பதிவிட்டு பிறந்த நாள் கொண்டாடிய சிறுமியை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெலாகு என்னும் அந்த சிறுமி தன்னுடைய 11-வது பிறந்தநாளில், பிரதமர் மோடியின் உருவப்படத்தை கேக்கில் பதிவிட்டு கொண்டாட வேண்டும் என தனது தந்தை மகேஷ் விக்ரம் ஹெட்ஜிடம் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த மகேஷ் தனது மகளுக்கு மோடியின் உருவப்படம் பதிவிட்ட கேக்கை வழங்கியுள்ளார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மகேஷ், உண்மையில் மோடி ஓவ்வொரும் குழந்தைகளின் மனதையும் கொள்ளையடிப்பவர்
தான் எனக் கூறியுள்ளார்.

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, தயவுசெய்து எனது வாழ்த்துக்களை பெலாகுவிற்கு தெரிவியுங்கள். அவளுடைய மகிழ்ச்சிக்காகவும், நல்ல
ஆரோக்கியத்திற்காகவும் நான் இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here