தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி! மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

1116

பங்களாதேசை சேர்ந்த நஸ்ரத் ஜஹான் என்கிற பள்ளி மாணவி, பள்ளி தலைமை ஆசிரியர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதனை முகம் தெரியுமாறு வீடியோ எடுத்த போலீசார், புகாரின் பேரில் தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதனிடையே நஸ்ரத் மீதுதான் தவறு உள்ளது எனக் கூறி, தலைமை ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் வீட்டில் முடங்கிய மாணவி இறுதி தேர்விற்காக தனது சகோதரன் துணையோடு பள்ளிக்கு சென்றுள்ளார். உள்ளே சென்ற நஸ்ரத்தை திடீரென சூழ்ந்துகொண்ட சிலர் அவரை அழைத்துச்சென்று கைகளை கட்டி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

80 சதவீத காயங்களுடன் அங்கிருந்து தப்பித்த மாணவி தன்னுடைய சகோதரனின் செல்போனில் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது அந்நாட்டு மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் சேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of