வேலூர் கோட்டையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கத்தியை காட்டி நாசம் செய்த கும்பல்..!

5318

வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண்ணை 3 பேர் நாசம் செய்துள்ள சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுதந்திர இந்தியாவின் சிறப்புமிக்க சின்னம் மட்டுமல்லாது, வேலூரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் கோட்டை. வெளி மாநிலம், வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை வந்து பார்வையிட்டு போவார்கள். உள்ளூர் மக்களும் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து செல்வது வழக்கம்.

இதைதவிர, காதலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்களும் இங்கு நடப்பது தொடர்கதையாகி விட்டது.

இந்நிலையில், வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு வயது 24.. தன்னுடைய காதலனுடன் இந்த கோட்டை பகுதியில் உட்கார்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து காதலர்களை சூழ்ந்து கொண்டது.. பிறகு அந்த பெண்ணை தூக்கி சென்று கத்திமுனையில் மாறி மாறி சீரழித்தது. இறுதியில் கழுத்தில் போட்டிருந்த நகைகளையும் பறித்து கொண்டு 3 பேரும் தப்பிவிட்டனர்.

வேலூர் கோட்டை பகுதியில் வைத்தே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இப்போது, ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணை சீரழித்து தப்பியோடிய 3 பேரில் ஒருவரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.. மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள். வேலூரின் மையப்பகுதியில், வரலாற்று புகழ்வாய்ந்த கோட்டை பகுதியிலேயே உள்ளூர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களை அதிர்ச்சி கலந்த வேதனையில் ஆழ்த்தி வருகிறது.

வேலூர் கோட்டை பகுதியில் வைத்தே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இப்போது, ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணை சீரழித்து தப்பியோடிய 3 பேரில் ஒருவரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.. மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

வேலூரின் மையப்பகுதியில், வரலாற்று புகழ்வாய்ந்த கோட்டை பகுதியிலேயே உள்ளூர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of