“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..! இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!

1289

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ரேவதி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). திருமணமான இவர், தனது பெரும்பாலான நேரத்தை செல்போனிலேயே கழித்து வந்தார். இதனால் அவருக்கு ஏற்பட இருக்கும் அதிர்ச்சி அன்று அவருக்கு தெரியவில்லை.

இவ்வாறு அவர் தொடர்ந்து செல்போனிலேயே காலத்தை கழித்து வந்த நிலையில், ஆண் ஒருவர் அவருக்கு மிஸ்டு கால் கொடுத்துள்ளார். அந்த நம்பருக்கு ரேவதி மீண்டும் கால் செய்துள்ளார். இவ்வாறு அவர்களின் நட்பு தொடர, அது சிறிது நாட்களுக்கு பிறகு காதலாக மாறியுள்ளது.

இருவரும் முகம் பார்க்காமலேயே தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவ்வாறு சென்றுக்கொண்டிருந்த நிலையில், அந்த ஆண், “இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி நம்ம சந்திக்கலாமா” என்று கேட்டுள்ளார். இதற்கு ரேவதியும் சம்மதம் தெரிவிக்க, தனது முகவரியை அந்த ஆண் அளித்துள்ளார்.

ஆளில்லாத நேரம் மற்றும் நாளை தெரிவித்த அந்த நபர், அப்போது நீ என் வீட்டிற்கு வா என்று ரேவதியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ரேவதியும் அந்த வீட்டிற்கு அவர் சொன்ன தேதியில் சென்றிருக்கிறார். வீட்டின் உள்ளே சென்றதும், பிளஸ் ஒன் படிக்கும் மாணவன் ஒருவன் இருந்திருக்கிறான்.

அவனிடம், அந்த ஆணின் பெயர் சொல்லி, இவரை பார்க்க வேண்டும் என்று ரேவதி கூறியிருக்கிறார். அதற்கு நான் தான் அந்த நபர் என்று மாணவன் சொல்ல, ரேவதிக்கு தூக்கி வாரிப்போட்டிருக்கிறது. அந்த ஆண் நண்பர் ஒரு பிளஸ் ஒன் மாணவன் என்பது தெரியவந்ததும், நான் தான் ரேவதி என்று அந்த பெண்ணும் மாணவனிடம் சொல்லியிருக்கிறார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவன் கூச்சல் போட ஆரம்பித்திருக்கிறான். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், மாணவன் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

அவர்களிடம் நடந்த அனைத்து கூத்தையும், ரேவதி சொல்ல, அவரது கணவருக்கு ஊர் மக்கள் தகவல் சொல்லி அவருடன் ரேவதியை அனுப்பி வைத்தனர். அந்த மாணவனும், தன்னிடம் பேசும் பெண், ஒரு மாணவி என்று பழகி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.