பேராசிரியர் சொன்ன அந்த வார்த்தை..! ஆசிட் குடித்த மாணவி..! நீளும் சாதிக்கொடுமை..!

511

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவுசல்யா. அரசுக் கல்லூரியில் எம்.ஃபில் படிக்கும் அந்த மாணவி, பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் ஆய்வுக்கட்டூரை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அந்த ஆய்வுக்கட்டூரையை ஏற்க மறுத்த ரவிச்சந்திரன், மாணவியை சாதி ரீதியாக திட்டிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த அந்த மாணவி, கல்லூரி ஆய்வகத்தில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார்.

மிகவும் சக்திவாய்ந்த ஆசிட்டை குடித்த அந்த மாணவி, அங்கேயே நிலைக்குலைந்து விழுந்துவிட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of