“ஆண்களே செய்ய தயங்குவாங்க..” அசால்ட்டாக செய்த ஜோதி..! சாதனை படைத்த பெண்..!

1522

ஆண் ஆதிக்கத்தில் இருந்து விடுப்பட்டு, பெண்கள் தற்போது ஒவ்வொரு துறைகளாக வென்று வருகின்றனர். இருப்பினும் இன்னும் சில துறைகளில் அவர்களின் சுவடு மிகவும் குறைவாக தான் இருக்கிறது.

பெரும்பாலும் அதற்கு காரணமாக இருப்பது உடற்தகுதியாக தான் உள்ளது. இந்நிலையில் மின்கம்பங்கள் பழுது பார்க்கும் பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் விண்ணப்பத்திருந்தார்.

இதற்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில், ஆண்கள் 1,109 பேரும், பெண்கள் 61 பேரும் கலந்துக்கொண்டனர். இந்த தேர்வில் 337 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதில் ஒரே ஒரு பெண் மட்டும் தான் தேர்ச்சி பெற்றார். அதுவும் ஜோதி தான்.

மின்கம்பங்கள் பழுது பார்க்கும் பணியில் சேர்வதற்கு உடற்தகுதி மிகவும் முக்கியம். மின்கம்பங்களில் உடனடியாக ஏறி பழுதை சரி செய்ய வேண்டும். இதனால் இந்த பணிக்கு பெரும்பாலும் பெண்கள் தேர்வு செய்யப்படுவதில்லை.

ஆனால், தேர்வில் கலந்து கொண்ட ஜோதி, ஆண்களே செய்யத்தயங்கும் வேலையை அசால்ட்டாக செய்து முடித்தார். 2 குழந்தைகளை பெற்றெடுத்த ஜோதி, மினகம்பங்களில் ஆண்களை விடவும் மிகவும் வேகமாக ஏறி அசத்தினார். இதுவரை இந்த பணியில் மொத்தம் 3 பெண்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement