திருமணத்திற்கு மறுத்த 20 வயது காதலன்.. – முகத்தில் ஆசிட் வீசிய 19 வயது இளம்பெண்.. – பிறகு நேர்ந்த பகீர் சம்பவம்..!

559

உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஜீவன்கார் பகுதியில் வசித்து வருபவர் பைசாத்.

20 வயதான இவர் இளம்பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால், சமீப காலமாக இளம்பெண்ணை சந்திப்பது, பேசுவது போன்றவற்றை பைசாத் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் ஆசிட் காயங்களுடன் பைசாத் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆசிட் வீசப்பட்டதால் அவரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நடந்தது பற்றி பைசாத்தின் தாயார் ருக்ஷானா கூறும்பொழுது, “அந்த இளம்பெண் எனது மகனை செல்போனில் அழைத்தார். ஆனால், எனது மகன் அழைப்பை எடுக்கவில்லை.

சம்பவத்தன்று காலையில் எனது மகனை நேரில் சந்தித்து அந்தப் பெண் பேசியுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண் கேட்க, எனது மகன் மறுத்துள்ளார்.

இதனால், அவன் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். இது பற்றி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement