நடுரோட்டில் நைட்டியோடு பெண்கள் செய்த மோசமான காரியம்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

1938

இணையதளங்கள் வளர்ச்சியின் காரணமாக யார் எது பண்ணாலும் உடனே வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது யூ-டுயூப் தான். நம்ம ஊர் கிழவிகளும், யூ-டுயூப்பும் ஒன்று என்று ஒரு காமெடி வசனம் உண்டு.

மனிதன் அனுபவித்து எழுதியிருப்பார் போல அந்த வசனத்தை. அந்த அளவிற்கு, யூ-டுயூப் பல்வேறு வீடியோக்களையும், விஷயங்களையும் உடனே மக்கள் மனதில் கடத்தி விடுகிறது, ஒரு திறமையான கொள்ளையன் போல.

இந்நிலையில் இதேபோன்று தற்போதும் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் நடைபெற்ற ஒரு வீடியோ YouTube-ல் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எந்த இடத்தில் நடக்கிறது என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

சில பெண்கள் ஒன்றாக ஒரு இடத்தில் கூடியுள்ளனர். எல்லோரும் நைட்டி அணிந்திருக்கின்றனர். பிறகு வரிசையாக நின்ற அவர்கள், கையில் இருக்கும் பீர் பாட்டிலில் இருக்கும் பீரை குடிக்கின்றனர். இந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை. இந்த வீடியோவை பார்க்கும் போது, பீர் குடிப்பதில் போட்டி வைத்ததைப்போன்று உள்ளது.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள் தங்களது கோபத்தை ஆதங்கமாக கமெண்டுகளில் பதிவு செய்து வருகின்றனர். பல பெண்கள் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தீவிரமாக போராடி வரும் நிலையில், இந்த வீடியோ வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.