ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் மாணவிகள் – கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை

1228

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில தினங்களாக கல்லூரி மாணவிகள் ஆண் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவது போன்ற வீடியோ காட்சி வைரலாக பரவி வந்தது.

அந்த வீடியோ பெற்றோர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வீடியோவில் இருந்த கல்லூரி மாணவிகள் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அம்மாணவிகள் பயின்று வந்த மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, வீடியோவில் இருந்த 4 மாணவிகளையும் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.