“பெண்களை இனிமேல் அங்க உட்கார வைக்கக்கூடாது” – அதிரடி உத்தரவிட்ட போக்குவரத்து கழகம்

3996

அரசு பேருந்துகளில் பஸ் இன்ஜின் பேனட் மீது பெண் பயணிகளை அமர வைக்க கூடாது என்று அரசு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் ”ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமைந்துள்ள இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைக்கக் கூடாது. ஓட்டுநர்கள், பெண்களிடம் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவதாக புகார் வந்துள்ளது.

இது தொடர்பாக தொடர்ந்து புகார் வரும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பஸ்களில் இன்ஜின் பேனட் மீது பயணிகள் அமர்ந்து பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பயணம் செய்யும்போது டிரைவர்கள் அவர்களிடம் பேச்சு கொடுக்கின்றனர். இதன் காரணமாக அவர்களின் கவனம் சிதறி சில நேரங்களில் விபத்து நேர்ந்துவிடுகிறது.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காகவும் டிரைவர் சீட் அருகேயுள்ள இன்ஜின் பேனட் மீது பெண்கள் அமர்ந்து பயணம் செய்ய அரசு போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.

சேலம் கோட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே டிரைவர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of