ஒரே கடையில் துணிகளை திருடும் பெண்கள் – வெளியான சிசிடிவி காட்சிகள்

304

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கல்லல் கடை வீதியில், துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு தினமும் 2 பெண்கள் துணி எடுப்பது போல் வந்து, கடையில் இருக்கும் விலை உயர்ந்த துணிகளை திருடி சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பின்னர், திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்த கடையின் உரிமையாளர் புகழ், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of