பதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே

276

இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி கட்சி, வலது லீக் கட்சி உடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்தது. இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே பிரதமராகவும், வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி துணை பிரதமராகவும் பதவியேற்றனர்.

14 மாதங்கள் ஆட்சி நடைபெற்ற நிலையில் கூட்டணியில் இருந்து விலகிய வலது லீக் கட்சி, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்த கான்ட்டே, அதிபர் செர்ஜியோ மெட்டரில்லாவிடம் ராஜினாமா கடித்தை அளித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of