சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதே என் நோக்கம் | Aishwarya Rajesh

377

‘நீதானா அவன்’ 2010ம் ஆண்டு தமிழில் வெளியான இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த 10 ஆண்டுகளில் இவர் கண்டுள்ள வளர்ச்சி மிக பெரியது. இந்த 2020 மற்றும் வரவிருக்கும் 2021 ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 9 படங்கள் வெளிவர காத்திருக்கிறது. 2015ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த காக்க முட்டை என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது.

சிறிய வயது நடிகை என்ற போதும் தனக்கு வரும் நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்தார் அது சற்று முதிர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் கவலை கொண்டதில்லை. இந்நிலையில் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடிக்கும்போது எனக்கு வயது 22.

இவ்வளவு சிறிய வயதில் யாரும் இதுபோன்ற முதிர்ச்சியான பாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. ஆனால் அதன் பிறகு சிலர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். நான் எப்போதும், எனது கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும்தான் பார்ப்பேன்’ என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of