கமல் ஹாசனா இப்படி பண்ணாரு..? ஞானவேல்ராஜா கொடுத்த அதிரடி புகார்..! அதிர்ச்சியில் திரையுலகத்தினர்..!

728

தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னை அணுகியதாகவும், தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் கூறியுள்ளார்.

நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை என்றும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை எனவும் ஞானவேல் ராஜா அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் மீது பிரபல சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of