“அமமுகவிற்கு கட்டம் சரியில்லை” – திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி!

651

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக வில் இருந்து ஆதரவாளர்களுடன் விலகிய வேலூர் ஞானசேகரன் திமுக வில் இணைந்தார்.

தி.மு.க வில் இணைந்த ஞானசேகரனுக்கும், அமமுக வில் இருந்து விலகிய வேலூர்மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக பொருளாளர் துரைமுருகன், மற்றும் வேலூர் மாவட்ட திமுக – வின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானசேகரன், அமமுகவின் தினகரன் கட்சி எனக்கு பிடிக்கவில்லை என்பதால் திமுக வில் இணைவதாக தெரிவித்தார்.

Advertisement