மீண்டும் டிரெண்டாகிய மோடி – டுவிட்டரில் டாப்பில் வந்த “GoBackSadistModi”

815

சென்னைக்கு அருகே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

இதில் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சமூக வலைதளங்களில் உள்ள எதிர்க்கட்சியினர் #GobacksadistModi என்ற ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சி ஆளும் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இணைந்துள்ளன.

இந்த நிலையில் இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒன்று வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் புதன்கிழமையன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 4 மணியளவில் கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு வருகிறார்.

முதலில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ. 5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை திறந்துவைக்கும் பிரதமர் மோடி தென்னக ரயில்வேயில் ஈரோடு – கரூர் – திருச்சி இடையே 142 கிலோ மீட்டர் தூரத்துக்கும்,

சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையே 158 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதைகளையும் திறந்துவைப்பதோடு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையை காணொளி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.

இதற்குப் பிறகு, அருகில் உள்ள மேடையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோதி பங்கேற்றுப் பேசுவார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்த முறை பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதில்லையென அறிவித்திருக்கிறார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதால் அவரை எதிர்க்கப்போவதில்லையெனக் கூறினார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் உள்ள எதிர்க்கட்சியினர் மோடிக்கு எதிரான பதிவுகளை #GoBackSadistModi என்ற ஹாஷ்டாகின் மூலம் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of