கோவா முதல்வர் காலமானார்

575

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (62)கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.

சில வாரங்கள் ஓய்வுக்குப் பிறகு, அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மனோகர் பாரிக்கருக்கு பதிலாக தங்களை ஆட்சி அமைக்க அழைக்க கோரி, காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு பாஜக தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அரசுப் பணிகளில் மெல்ல ஈடுபட்ட வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், இன்று அவர் அகால மரணமடைந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of