யார் இந்த பாரிக்கர்? – மனோகர் பாரிக்கரின் வரலாறு -சிறப்பு தொகுப்பு

614

மனோகர் பாரிக்கர் கோவா மாநிலத்தின் மப்பூசாவில் பிறந்தவர். இவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மராத்தியில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர். 1978இல் மும்பையிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே “ஐஐடி”யில் படித்த முதல் மாநில முதல்வர் ஆவார்.

மனோகர் பாரிக்கரும், நந்தன் நிலெக்கணியும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள்.

பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான மனோகர் பாரிக்கர் அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார். பாரிக்கர் முதலில் 1994 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் ஜூன் 1999 முதல் நவம்பர் 1999 வரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். பாரிக்கர் அக்டோபர் 24, 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக கோவாவின் முதல்வர் ஆனார்.

ஆனால் அவரது பதவிக்காலம் பிப்ரவரி 27, 2002 வரை மட்டுமே நீடித்தது. பின்பு ஜூன் 5, 2002இல் இவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 29 ஜனவரி 2005இல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் பிப்ரவரி 2005இல் பெரும்பான்மையை நிரூபித்தார்.

2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை, திகம்பர் காமத் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 இல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது.

2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில், கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்றது. பாரிக்கர், உத்தரப் பிரதேசத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நரேந்திர மோதியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
பின்னர் மார்சு 14, 2017 ஆம் ஆண்டு மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றார்.

இதனையடுத்து கடந்த சில காலமாக கணயத்தில் புற்று நொய் ஏற்பட்ட நிலையில் உடல் நிலை மோசமாகி தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், மார்ச் 17 2019 அன்று மரணமடைந்தார். 

அவர் மரணமடைந்ததையடுத்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1 குறைந்துள்ளதால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆளுனரிடம் கோரியுள்ளது. இதனால் கோவாவில் பாஜக ஆட்சி மீண்டும் கவிழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of