மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய சட்டம்

310
Central-government

காவிரி உள்பட 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா, கோவா – கர்நாடகா, டெல்லி-ஹரியானா உள்பட பல்வேறு மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் வழக்குகளும் இருந்து வருகின்றன.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதுள்ள நதிநீர் வாரியச் சட்டத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால், அதனை மாற்றும் வகையில் இந்த புதிய சட்டம் நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய சட்டத்தின்படி இருவேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

காவிரி, கங்கை, சிந்து, கோதாவரி, மகாநதி, மாஹி, நர்மதா, பெண்ணாறு, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நதிகள் பாயும் பகுதிகளில் டெல்டா வளர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்படும்.

இக்குழுக்கள் நதிநீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், நதி பாயும் பகுதிகளில் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் என்றும் தெரிகிறது.