ஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..!

351

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நெற்புகை கிராமத்தைச் சேர்ந்தவர் இறைச்சி வியாபாரி அழகப்பன்.

இவர் கறம்பக்குடி பகுதிகளான திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, ஏலக்காய்விடுதி போன்ற கிராமங்களில் மேய்ந்து வந்த ஆடுகளைத் திருடி தனது ஹோண்டாசிட்டி காரில் கடத்தி விற்பனை செய்து வந்ததாக காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

அவருடைய ஹோண்டா சிட்டி காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் மீது புதுக்கோட்டை செம்பட்டிவிடுதி காவல் நிலையத்திலும், திருச்சி துறையூர் காவல் நிலையத்திலும் ஆடு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of