ஒரே நேரத்தில் வைரலான இரண்டு ஹஸ்டேக்… பின்னணி என்ன?

641

டிவிட்டரில் தற்போது #GoBackModi மற்றும் #Darbar ஆகிய இரண்டு டேக்குகள் வைரலாக டிரெண்டாகி வருகிறது. ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் டிரெண்டாவது நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். இன்று மாலை மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவர் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை அடுத்து கோ பேக் மோடி மீண்டும் வைரலாகி வருகிறது. எப்போதும் போல இணையத்தில் #GoBackModi வைரலாக டிரெண்டாகி வருகிறது. இதில் நிறைய எண்ணிக்கையில் டிவிட்டுகள், மீம்ஸ்கள் போடப்பட்டு வருகிறது.

அதேபோல் #GoBackModi டிரெண்டாகும் அதே வேளையில் தற்போது #Darbar என்ற டேக்கும் டிரெண்டாகி வருகிறது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த வருடம் வெளியாக உள்ள படம் தர்பார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை அடுத்து #Darbar டேக் வைரலாகி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் #Darbar டேக்தான் தற்போது தேசிய அளவில் நம்பர் ஒன்னில் இருக்கிறது.

காலையில் இருந்து #GoBackModi நம்பர் 1ல் இருந்து பின் தர்பார் பர்ஸ்ட் லுக் வந்ததும் இரண்டாம் இடத்திற்கு சென்றுவிட்டது . தற்போது தேசிய அளவில் #GoBackModi இரண்டாம் இடம் பிடித்துள்ளது. #GoBackModi டேக் டிரெண்ட் செய்யப்பட்டால் எப்போதும் அதுதான் முதலிடத்தில் இருக்கும். ஆனால் தற்போது தர்பார் அதை முந்தி இருக்கிறது.

இதனால் தேர்தல் நேரத்தில் மோடிக்கு எதிரான டேக் வைரலாவதை தடுக்கத்தான் இந்த டிரெண்ட் செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #GoBackModi டிரெண்டாவதை தடுப்பதற்காக இந்த #Darbar டேக் டிரெண்ட் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of