கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

314

நீண்ட வருடங்களாக ஒரேயொரு வெற்றிக்காக போராடிக்கொண்டிக்கும் நடிகர் விக்ரம், தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் பணிகள் விறுவிறுவென நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 28ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையறிந்த ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of