மீண்டும் தங்க விலை உயர்வு..!

1422

சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து, ஏற்ற இறங்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. ஆனால், இப்போதும், எளிய மக்கள் வாங்க முடியாத அளவில் தான் தங்கவிலை இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தங்கத்தின் விலை பற்றி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 608 உயர்ந்து, 38 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை, ரூ.76 உயர்ந்து, 4 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 10 காசு உயர்ந்து ரூ.63.80-க்கு விற்கப்படுகிறது.