மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை..!

618

தங்கத்திலும், நிலத்திலும் பணத்தை முதலீடு செய்தால், அது எப்போதும் பயன்படும் என்று பழமொழி கூறுவார்கள்.

அந்த பழமொழிக்கு ஏற்றவாறு, பலரும் தற்போது தங்கத்திலேயே முதலீடு செய்து வருவதால், தங்க விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 16 ரூபாய் உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 925-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.